மூல ராமாயணத்தில் நூறு கோடி ஸ்லோகங்கள் உள்ளன. ஸ்ரீமன் நாராயணன் நாரதரிடம் இந்த ராமாயணத்தை அனைத்து உலகங்களிலும் பரப்புமாறு கேட்டுக்கொண்டார். நாரதர் வால்மிகியின் ஆசிரமத்திற்கு வந்து, அவருக்கு ராமாயணத்தை உபதேசித்து அதை இயற்றுமாறு கூறினார். வால்மிகி இயற்றிய ராமாயணத்தில் 24,000 ஸ்லோகங்கள் உள்ளன. ஏழு காண்டங்களாக இது பிரிக்கப்பட்டுள்ளது.

24,000 ஸ்லோகங்களைக் கொண்ட வால்மிகி ராமாயணத்தை, த்வைத மத்வ சித்தாந்தத்தின்படி அறிந்து கொள்ளவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஜகத்குரு ஸ்ரீமன் மத்வாசாரியார், தனது தாத்பர்ய நிர்ணய கிரந்தத்தில் ராமாயணத்தை நமது சித்தாந்தத்தின்படி விளக்கியுள்ளார். நாராயண பண்டிதாசார்யர் சங்க்ரஹ ராமாயணம் என்னும் நூலை இயற்றியுள்ளார். போலவே பல மத்வ யதிகள் ராமாயணத்தை நமக்குத் தகுந்தாற்போல் புரிய வைத்துள்ளனர். 

வால்மிகி ராமாயணத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் த்வைத மத்வ சித்தாந்தத்தின்படி விளக்க முயற்சி செய்துள்ளோம். தாத்பர்ய நிர்ணய, சங்க்ரஹ ராமாயண மற்றும் பல த்வைத கிரந்தங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. 

கன்னட மூலத்தை வித்வான் பெம்மத்தி வெங்கடேஷாசார் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன். 

தினமும் சில ஸ்லோகங்கள் இணையத்தில் ஏற்றப்பட்டும். ஆனால் பத்து நாட்களில் பழைய பதிவுகள் நீக்கப்படும். ஒவ்வொரு காண்டம் முடிந்தவுடன் வரும் ஈ-புத்தகத்தை அல்லது புத்தகத்தை வாங்கிப் படித்து அவற்றை பாதுகாத்து வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முயற்சிக்காக பொருளுதவி செய்ய விரும்புபவர்கள் தயவு செய்து ‘சேவை விவர’ பக்கத்தைப் பார்க்கவும். 

ராமாயணத்திற்கு சம்பந்தப்பட்ட சொற்பொழிவுகள் பல இங்கு வெளியிடப்பட உள்ளன. அவற்றையும் பக்தர்கள் அனைவரும் கேட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.


Moola Ramayana consists of 100 crore verses. Sriman Narayana had asked Sage Narada to spread this epic to all in the Universe. Sage Narada did upadesha to Valmiki and asked him to recite Ramayana - so that the people can understand and get correct and accurate knowledge about Sri Ramachandra. The Ramayana recited by Valmiki consists of 24,000 slokas divided into seven Kandas. 

This project is to understand the entire 24,000 slokas of Valmiki Ramayana with regard to Dvaita Siddhantha. Jagadguru Sriman Madhwacharya has recited Tatparya Nirnaya where he has explained Ramayana in a beautiful way. Narayana Panditacharya has written Sangraha Ramayana which also exhibits Hari Sarvothama and other Dwaita tenets in the Ramayana. Also there are many other Dvaita references of Ramayana. 

Here each and every sloka of Valmiki Ramayana is explained and referenced to Dvaita Siddhantha, Tatparya Nirnaya, Sangraha Ramayana and other Dvaita books. 

Kannada version is written by Vidwan Bemmathi Venkateshachar. Tamil and English translation is done by 'Jagannatha Kesava' Sathya Narayanan. 

Daily Few Slokas will be translated, typed and uploaded to the Blogsite. However, after 10 days of upload, the older articles will be removed from the site. Readers would be able to read the entire article as an eBook or Paperback book by subscribing to any Seva mentioned in the site.

Also many pravachanas with regard to Ramayana will be uploaded to this site. 

All Raama Bhakthas are requested to make use of this site, articles, pravachanas and pray to Lord Sri Ram always.

Sri Krishnarpanamasthu.

Based on Dwaita Siddhantha